சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 357 ஆக உயர்வு….

--
சென்னை:
மிழகத்தின் தலைநகர் சென்னையில், கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும்  நிலையில், கட்டுப்பாட்டு மண்டலங்களில் 357 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மொத்த  எண்ணிக்கை 4058 ஆக அதிகரித்துள்ளது. இன்று 2 பேர் உயிரிழந்த நிலையில்   பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

கொரோனாவின், ‘ஹாட் ஸ்பாட்’ ஆக, சென்னை  கோயம்பேடு மார்க்கெட்  மாறியுள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட் சென்றவர்கள் என்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் 230ல் இருந்து 357 ஆக உயர்வு.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்பட்ட தொற்று காரணமாக, மற்ற மாவட்டங்களிலும், நோய் பரவல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You may have missed