சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது

சென்னை

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று ஒரே நாளில் 981 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 1,57,614 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று 17 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 3.088 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 831 பேர் குணம் அடைந்து மொத்தம் 1,44,511 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 10,015 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்குக் குறைவாக இருந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இன்று மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.