அடையாறு பகுதி மாநகராட்சி அதிகாரிக்கு கொரோனா…

சென்னை:

கொரோனா தடுப்பு பணியில் அடையாறு பகுதியில் ஈடுபட்ட  மாநகராட்சி துப்புரவு மேற்பார்வை யாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவருக்க கீழ் பணியாற்றி வந்த சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் துப்புரவுப்பணிகள், கிருமி நாசினி தெளித்தல் போன்றவை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானி நிலையில்,  அவரின் கீழ் பணியாற்றிய 10 வார்களின் பணியாற்றிய  100க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும் அவருக்கு நெருக்கமானவர்களை கண்டறியும் பணியும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 10பேர் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.