சென்னை : மாநகராட்சி துப்புறவு தொழிலாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்

சென்னை

மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்த நோட்டிசை திரும்ப பெற்றுள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியின் போது சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ள ஓனிக்ஸ் என்னும் தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்து வந்த ஆட்சியில் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. அதனால் மீண்டும் சென்னை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அந்த பணியை செய்து வந்தனர்.

இந்நிலையில் இந்த துப்புரவு பணிகளை மீண்டும் தனியாரிடம் அளிக்க அரசு முடிவு செய்தது. அதை ஒட்டி சென்ன மாநகராட்சி சார்பில் ரூ.1546 கோடி செலவில் டெண்டர் கோரி ஆன்லைன் விளம்பரம் செய்தது. இதனால் பல்லாயிரக்கணக்கானவ்ர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டது.

அதனால் சென்னை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். தற்போது மாநகராட்சி அதிகாரிகள் குப்பை அள்ளும் பணிக்கு டெண்டர் கோரப்பட மாட்டாது என உறுதி  அளித்துள்ளன்ர். அதை ஒட்டி வேலை நிறுத்த நோட்டிசை துப்புரவு தொழிலாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர்.