சென்னை: கொரோனா விதிகளை மீறியதாக சென்னை மாநகராட்சி இதுவரை 3 கோடி ரூபாய் அபராதத்தை வசூலித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் இருந்து செல்லக்கூடாது, உமிழ்தல் கூடாது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.

விதிகளை மீறுவோரிடம் இருந்து அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியானது, கிட்டத்தட்ட 3. 08 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கிட்டத்தட்ட 15 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து இந்த அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக, 51, 85, 200 ரூபாய் 5வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் வசூலிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த 10வது மண்டலத்தில் 26, 92,540 ரூபாய் வசூலாகி உள்ளது. மிகவும் குறைந்த அளவாக 15வது மண்டலத்தில் 5, 30,060 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.