சென்னை:

மிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் ட்ரோன் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான சோதனை சமீபத்தில் சென்னை ரிப்பன் மாளிகையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கிருமி நாசினிகள் அனைத்து இடங்களிலும் தெளிக்கப்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய ட்ரோன்களை சோதனை செய்த பிறகு, ட்ரோன் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை நகரம் முழுவதும் கிருமிநாசினியை தெளிக்க தொலை கட்டுப்பாட்டு ட்ரோன் உபயோகப்படுத்தப்பட உள்ளது. அந்த  ட்ரோனில் பொருத்தப்பட்டுள்ள  கொள்கலனனில் கிருமி நாசினி நிரப்பட்டு, அதை இயக்குவதன் மூலம், முக்கிய பகுதிகளில் தெளிக்கப்பட இருப்பதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

ஒரு ட்ரோன் மூலம் ஒருமுறை,  50,000 சதுர அடி பரப்பளவு கிருமி நாசினி தெளிக்க முடியும் என்றும் என்றும், இதுபோன்ற நான்கு கிருமிநாசினி ட்ரோன்களை வாங்குவதற்கு சென்னை கார்ப்பரேசன் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.