கொரோனா சோதனையில் நாட்டிலேயே சென்னை மாநகராட்சி முதலிடம்… தமிழகத்தில் குணமடைந்தோர் 91 சதவிகிதம் பேர்…

சென்னை: கொரோனா சோதனையில் நாட்டிலேயே சென்னை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் தமிழகத்தில்  91 சதவிகிதம் பேர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், சென்னையில் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. நேற்றும் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது. தமிழகத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிகை 6 லட்சத்தை கடந்துள்ளது.
தற்பொதைய நிலையில், தமிழகம் முழுவதும்,  46,369 பேர் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 5,688பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செயய்பப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,03,290 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட  66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 9,586 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும்  5,516 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை தொற்றில் இருந்து மீண்டோர் மொத்த எண்ணிக்கை  5,47,335 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல சென்னையில் மட்டும் 1,53,846 பேர் குணமடைந்து உள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வருவோர் எண்ணிக்கை 90.73 சதவிகிதமாக உயர்நதுள்ளது. இது நாட்டிலேயே அதிகம் என்று கூறப்படுகிறது.
அதுபோல, தமிழகத்தில் நேற்று மட்டும்,  87,647  மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு, இதன் காரணமாக தமிழகத்தில் இதுவரை  74,41,697  பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது சென்னையில் மட்டும்  13,135 சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. .  இது நாட்டிலேயே அதிகபட்சமானது.
அதன்படி, மாநிலத்தில் நேற்று 85 ஆயிரத்து 808 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72 லட்சத்து 21 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், மாநிலம் முழுவதும் நேற்று 87 ஆயிரத்து 647 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 74 லட்சத்து 41 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், மாநிலம் முழுவதும் நேற்று 87 ஆயிரத்து 647 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 74 லட்சத்து 41 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே சென்னை மாநகராட்சி தான் கொரோனா பரிசோதனைகளையும், மருத்துவ முகாம்களையும் மிக அதிகமாக நடத்தியுள்ளது. இந்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக கடந்த மார்ச் 17ம் தேதி முதல் தற்போது வரை 91% கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.