சென்னை: சென்னை அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட பெசன்ட் நகரில், மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு மழைக்கால உடைகளை ஆணையர் பிரகாஷ் வழங்கினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில் முதற்கட்டமாக செயல்திறன் அளவில்  திடக் கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
4 மண்டலங்களில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்கள் பண்டிகைகள் காலம் என்பதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

பண்டிகை நாட்களையொட்டி தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக அரசின் உயர்மட்ட குழுவே முடிவெடுக்கும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயார் என்று கூறினார்.