சென்னை:

ருவமழை பொய்த்துபோன நிலையில், தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் குடிநீருக்காக மக்கள் குடங்களுடன் அல்லாடு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி  ஏடிஎம் பாணியில் தூய குடிநீரை வழங்க  முடிவு செய்துள்ளது.

சென்னையில் குடிநீர் வாரியம் மூலம் சரியான அளவு குழாய்களில் குடிநீர் சப்ளை செய்யப்டாத நிலையில், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் குடிநீரை காசு கொடுத்தும் வாங்கும் நிலை உருவாகி உள்ளது. குடி தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  குடிக்க மற்றும் சமையலுக்கு  லாரியில் விநியோகம் செய்யப்படும் குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளனர்.  குடம் ஒன்று 10 ரூபாய் முதல் 20ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரும் துயரினை சந்தித்து வருகிறார்.

மேலும், கேன் தண்ணீரின் விலையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கேன் ஒன்று ரூ.15, 20 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது குறைந்த பட்சம் ரூ.30 ஆகவும், சில கம்பெனிகளின் குடிநீர் கேன் ஒன்று ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற விலையில் கேன்களை உயர்வகுப்பினர் மட்டுமே வாங்கி உபயோகப் படுத்தும் நிலை உள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனியார் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.  இதற்காக வாட்டர் ஏடிஎம்களை  நிறுவ ஏற்பாடுகளை நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே இதுபோன்ற சேவைகள் சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த நிலையில், அங்கு குவியும் பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போது  சென்னையில்  800 இடங்களில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த சேவைக்காக 250 சதுர அடி நிலம், மெட்ரோ வாட்டர் மற்றும் மின்சார வசதியை அரசு வழங்குகிறது.

இந்த ஏடிஎம்களில் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் முறையில் தூய்மையான குடிநீர் அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மையங்களிலும் இரு பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட உள்ளனர்.

இந்த திட்டம் மூலம் ஒரு 20 லிட்டர் கேன் குடிநீர்  ரூ.7க்கு விற்கப்படுகிறது. ஒரு கேன்  விற்றால் மாநகராட்சிக்கு ரூ.1 கிடைக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

இதன்மூலம் ஒவ்வொரு வார்டிலும் 10 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என்று சென்னை மாநகராட்சிக்கு தெரிவித்துள்ளது.

சீக்ககிரம் கொண்டுவாங்கப்பா…..