கட்டுமான கழிவு பொருட்களை சுத்திகரிக்க புதிய வழி: சென்னை மாநகராட்சி அமைக்கும் 2 சுத்திகரிப்பு நிலையங்கள்

சென்னை: சென்னையில் கட்டுமான கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க, 2 நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டப்படுகிறது. அதற்காக அங்கு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந் நிலையில், ஒட்டுமொத்த கட்டுமான கழிவுப் பொருட்களையும் சுத்திகரிப்பு, 2 சுத்திகரிப்பு நிலையங்கள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் அமைக்கப்பட உள்ளன.

இது குறித்து, திடக்கழிவு மேலாண்மை திட்ட மூத்த அதிகாரி ஒருவர் கூறி இருப்பதாவது: கட்டுமான பொருட்களில் உள்ள கழிவுகளை இந்த இயந்திரங்கள் பயன்படும். இதன் மூலம், கட்டுமான கழிவுகளை தரம் பிரித்து, மறு சுழற்சி முறையில் மீண்டும் கட்டுமானத்துக்கே பயன்படுத்தலாம் என்றார்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் பொறியாளர் வீரப்பன் கூறி இருப்பதாவது: அத்துமீறி குப்பைகளை கொட்டியதற்காக, 1.71 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.  பெரிய கட்டிடங்களை தகர்க்கும் போது அனைத்து பொருட்களையும் ஒப்பந்ததாரர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

சிறிய அளவிலான கட்டிடங்களை இடிக்கும் போது தான் அவற்றை அகற்றாமல் இங்கே வந்து அத்துமீறி கொட்டுகின்றனர் என்றார். சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 400 டன் கட்டுமான கழிவுப் பொருட்கள் விதிகளை மீறி காலி இடங்களில் கொட்டி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.