சென்னை

சென்னை நகரச் சாலைகளில் கேட்பாரற்று நின்ற வாகனங்களை ஏலத்தில் விற்ற மாநகராட்சி  சிசிடிவி காமிரா அமைக்க காவல்துறைக்கு நிதி வழங்கி உள்ளது

சென்னை மாநகர சாலை ஓரங்களில் பல நாட்களாகப் பழுதடைந்த வாகனங்க்ள் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு கடும் இடையூறாக இருந்தன.  இவற்றை காவல்துறை உதவியுடன் சென்னை மாநகராட்சி அகற்றியது.   இவ்வாறு அகற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள், கார், வேன் என சுமார் 10,954 வாகனங்கள் இருந்தன.  அவற்றை மாநகராட்சி ஏலம் விட்டது.

இந்த வாகனங்கள் ஏலத்தில் மூலம் ரூ. 3, 05,00,000 கிடைத்துள்ளது.   இதில்   முதல் கட்டமாக 3,079 வாகனங்களுக்கான தொகையாக ரூ.91.11 லட்சம் மாநகராட்சிக்கு கிடைத்துள்ளது.  இதில் நகரச் சாலைகளில் சிசிடிவி காமிராக்கள் பொருத்த நிதி உதவியாக காவல்துறைக்கு 75% வழங்க உள்ளதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தற்போது கிடைத்துள்ள ரூ.91.11 லட்சத்தில் 75% ஆக ரூ.68.33 லட்சம் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்த தொகைக்கான காசோலையைச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று காவல்துறை ஆணையர் ஏ கே விஸ்வநாதனிடம் அளித்துள்ளார்.