சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆண்டிபாடி சோதனை

சென்னை

சென்னை மாநகராட்சியில் பணி புரியும்  ஊழியர்களுக்கு ஆண்டிபாடி சோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களில் பலருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுகிறது.

இவர்களுக்கு அறிகுறி இல்லாத போதிலும் இவர்கள் மூலம்கொரோஒனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டிபாடி சோதனை என்பது இரத்தத்தைச் சோதிப்பதாகும்.

இந்த வகை சோதனையைச் சென்னை மாநகராட்சி தனது ஊழியர்களுக்குச் செய்யத் தொடங்கி உள்ளது.

முதல் கட்டமாக ரிப்பன் கட்டிடத்தில் பணி புரியும் 1000 ஊழியர்கள் சோதனை செய்யப்பட உள்ளனர்.

இவர்களுடைய இரத்தத்தில் ஐஜிஜி அல்லது ஐஜிஎம் உள்ளதா எனச் சோதிக்கப்பட உள்ளது.

இவ்விரண்டில் எது இருந்தாலும் கொரோனா பாதிப்பு உள்ளதாக பொருளாகும்.

ஐஜிஎம் இருந்தால் அவர்கள் கொரோனாவுக்கான ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

ஐஜிஜி இருந்தால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணம அடைந்தவர்கள் எனப் பொருளாகும்.