சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பகுதிகளில் மாற்றம் செய்ய மாநகராட்சி முடிவு…

சென்னை:
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சென்னையில்,  கொரோனா பரவல் தடுப்பு காரணமாக, பாதிக்கப்பட்ட நோயாளிகள் வசிக்கும் பகுதிகள், கொரோனா தடுப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு வருகிறது.
bty
தற்போது இந்த முறையில் மாற்றத்ததை கொண்டுவர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 513 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளன.  இதன் காரணமாக  அந்த பகுதிக்குள் யாரும் உள்ளே நுழையாதவாறும், அங்கு உள்ளவர்கள் வெளியே செல்ல முடியாதவாறும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா  கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முழு தெருவையும் அடைப்பதை தவிர்த்து தொற்று பாதித்த அடுக்குமாடி குடியிருப்பையோ இரண்டு மூன்று வீடுகளையோ மட்டும் தடுப்புகள் கொண்டு கட்டுபடுத்தபட்ட பகுதியாக மாற்ற வேண்டும் என சென்னை  மாநகாரட்சி அறிவித்து உள்ளது.

 

You may have missed