விரைவில் சென்னை மாநகராட்சியின் சைக்கிள் ஷேரிங் திட்டம்
சென்னை
மாநகாராட்சியின் சார்பில் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 கட்டணத்தில் சைக்கிள் ஷேரிங் திட்டம் விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளது.
நாடெங்கும் சுற்றுச்சூழல் மாசடைவது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வாகனங்கள் உபயோகிப்பதை குறைக்க அல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் திநகர் உட்பட பல இடங்களில் நடைபாதை மற்றும் சைக்கிள் பதைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அத்துடன் சைக்கிளில் செல்வோருக்கு வசதியாக ஜெர்மன் நிறுவனம் ஒன்றின் இந்திய கூட்டு நிறுவனம் மூலம் சென்னை மாநகராட்சி சைக்கிள் ஷேரிங் திட்டத்தை விரைவில் அமுல்படுத்துகிறது. முதல் கட்டமாக அண்ணா நகர், மெரினா கடற்கரை உள்ளிட்ட 5 இடங்களில் சைக்கிள் ஷேரிங் மையங்கள் திறக்கப்பட உள்ளன. இங்கு ஸ்மார்ட் மொபைல் செயலி மூலம் சைக்கிள் சேவை பெற முடியும்.
இந்த சைக்கிள்களுக்கு முதல் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படும். அதன் பிறகு ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ரூ.9 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ஒரு நாள் முழுவதும் உபயோகிக்க ரூ. 49 கட்டணமும் மாதம் முழுவதும் தினம் 2 மணி நேரம் உபயோகபடுத்த ரு. 249 கட்டணமும் வசூலிக்கப்படும்.
ஜிபிஎஸ் வசதி கொண்ட இந்த சைக்கிள்கள் எங்கு உள்ளது என்பதை எளிதில் கண்டறிய உள்ளது. இந்த திட்டத்துக்கான வாடகை இல்லாத இட வசதிமட்டும் சென்னை மாநகராட்சி அளிக்க உள்ளது. சைக்கிள்கள் அமைப்பதும் மற்றும் அவற்றை பழுது பார்ப்பது ஆகியவை நிறுவன செலவாகும்.