சென்னை

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டனத்தை ஜனவரி 1 முதல் சொத்து வரியுடன் என அறிவிக்கபட்டுள்ளது.

சென்னை நகரில் குப்பைகள் மற்றும் திடக்கழிவு அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.   சென்னை மாநகராட்சி சமீபத்தில் திடக்கழிவு மேலாண்மை பய்னாளர் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.  இந்த கட்டணம் வசூல் குறித்து இன்று அறிவிப்பு ஒன்றை சென்னை மாநக்ராட்சி வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2010 இன்படி பெருநகர சென்னை மாநகராட்சியால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 இயற்றப்பட்டுள்ளது.  இதற்கு அரசாணை எண் GO(2D) எண் 09 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 10.01.2020ன் படி தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டு சென்னை மாவட்ட அரசிதழில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 11.02.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 இன்  படி கழிவு உருவாக்குபவர்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என்பதால் இதனை சொத்து வரியுடன் சேர்த்து 01.01.2021 முதல் வசூலிக்க நடவடிகை எடுக்கபட்டுள்ளது

மேலும் திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டண விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் www,.chennaicorporationgov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன் கீழ் அட்டவணை 1ல் தெரிவிக்கபட்டுள்ளது. என பெருநகர சென்னை மாநக்ராட்சி ஆணையாளர் திரு. கோ. பிரகாஷ் இ ஆ ப தெரிவித்துள்ளார்.” என கூறப்ப்ட்டுள்ளது.