Random image

திருமுருகன் காந்தி மீதான உபா சட்டம் ரத்து…சென்னை நீதிமன்றம்

சென்னை:

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (உபா) செல்லாது என சென்னை அல்லிகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014ம் ஆண்டு தமிழ் ஈழம் மற்றும் பாலஸ்தீன விடுதலை தொடர்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசியதற்காக திருமுருகன் காந்தி மீது 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின்மேரி இன்று தீர்ப்பு கூறினார். திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் செல்லாது என்று அவர் உத்தரவிட்டார்.