சாலை ஓரங்களில் அமித்ஷா பேனர்கள்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி  கேள்வி

சென்னை:

பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வந்திருக்கும் நிலையில், அவரை வரவேற்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை யோரங்களில் பாஜகவினர் பேனர்களை வைத்திருந்தனர்.

இதைக்கண்ட சென்னை உயர்நீதி மன்ற தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக அரசு வழக்கறிஞரை அழைத்து சரமாரியாக கேள்வி விடுத்தார்.

சென்னையில் சாலையோரம் விளம்பர பதாதைகள் வைக்க சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள  நிலையில்,  நீதிமன்ற உத்தரவை மீறி பேனர் வைக்கப்படுவது தொடர்கதையாகிறது.

ஏற்கனவே  ஆளுங்கட்சியினர் பேனர்கள் வைத்திருப்பதை கண்ட சென்னை  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி , தமிழக அரசின்  தலைமை வழக்கறிஞரை கூப்பிட்டு அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

இநத நிலையில் இன்று தமிழக பாஜகவினர்,அ சாலை ஓரங்களில் அமித்ஷாவை வரவேற்று  சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரையிலும், தொடர்ந்து ஓஎம்ஆர் சாலையில் தங்ககடற்கரை வரையில் ஏராளமான பேனர்கள் வைத்துள்ளனர்.

இதன் காரணமாக சாலைகளில் நடந்துசெல்லும் பொதுமக்கள், மாணவ மாணவி கள் கடும் அவதிக்கு உள்ளார்கள். பல இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்து எறியப்பட்டன.

இந்த நிலையில், இதுகுறித்து,  அரசு தலைமை வழக்கறிஞரிடம், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சரமாயாக கேள்வி எழுப்பினார். பின்னர்,  பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர்கள் வைக்கலாமே, அதற்கான முயற்சியை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.