மசாலா பாக்கெட்டுகளில் வைத்து போதை மருந்து கடத்தல் : சென்னை சுங்கத்துறை கண்டுபிடிப்பு

சென்னை

சாலா பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து போதை மருந்து கடத்துவதைச் சென்னை விமானநிலைய சுங்கத்துறை கண்டு பிடித்துள்ளது.

போதை மருந்து கடத்தல் கடந்த சில வருடங்களாகக் கட்டுக்கடங்காமல் வளர்ந்துக் கொண்டு இருக்கிறது.

போதை மருந்து கடத்துவோருக்குச் சென்னை ஒரு மையமாக உள்ளது.

எனவே இங்கு அடிக்கடி போதை மருந்து கடத்தும் கும்பல் பிடிபட்டு வருகின்றன.

சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவுக்கு புகழ் பெற்ற நிறுவன மசாலா பொடிகள் கொரியர் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

அவற்றைச் சோதனை இட்டதில் மசாலா பொட்டலங்களில் போதை மருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

’சுடோபெட்ரின்’ என பெயர் உள்ள இந்த போதை மருந்து 30 கிலோ அளவுக்குக் கடத்தப்பட இருந்தது.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை இந்த போதை மருந்தின் மதிப்பு ரூ.30 லட்சம் எனத் தெரிவித்துள்ளது.

இந்த கடத்தலின் மூளையாகச் செயல்பட்டவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.