சபரிமலையில் யானை தாக்கி சென்னை பக்தர் பலி

பம்பை:

கேரளா மாநிலம் சபரிமலையில் யானை தாக்கி சென்னை பக்தர் பலியானார்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை சென்று திரும்பி வருகின்றனர். தற்போது மகரஜோதி வழிபாடுக்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

இந்த வகையில் சென்னையில் இருந்து 14 பேர் ஒரு குழுவாக சபரிமலை சென்றிருந்தனர். கரிமலை ஏற்றம் என்ற பகுதியில் இந்த குழுவை சேர்ந்த நிதேஷ்குமார்( வயது 30) என்பவர் இயற்கை உபாதை காரணமாக காட்டுப்பகுதிக்குள் சென்றார். அங்கு காட்டு யானை அவரை பயங்கரமாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.