சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் 4 போலீசாருக்கு கொரோனா…

சென்னை:
மிழக காவல்துறை தலைவர் அலுவலகமான டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றி வரும் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி  உள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள் கொரோனா தீவிரமாகி உள்ள சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கு நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. சென்னையில் கடுமையாக தொற்று பரவி வரும் நிலையில், டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வரும் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இன்று ஒரேநாளில் 4 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2  பேர் உளவுத்துறை காவலர்கள் மற்ற 2 பேர் காவலர்கள் என்று கூறப்படுகிறது. இது காவலர்கள் வட்டாரத்தில் எபரபரப்பைஏற்படுத்தி உள்ளது.