சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளிடம் மனிதாபிமானம் பார்க்கக்கூடாது! கமல்ஹாசன்

சென்னை:

மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளிடம் மனிதாபி மானம் பார்க்கக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், ‘மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இவர்களிடம் மனிதாபிமானம் பார்க்க தேவையில்லை. இவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

இந்த விஷயத்தில் நீதி விரைவாக செயல்பட வேண்டும், நின்று கொல்வதெல்லாம் நீதிக்கு ஆகாது. தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்ட ஒரு விஷயம் இது என்றார்.

மேலும், தமிழகத்தில் நடைபெற்ற ஒப்பந்ததாரர் ரெய்டு குறித்து கூறியபோது,  தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட ரெய்டுகளில் சிக்கிய ரொக்கங்களும், தங்க நகை மற்றும் கட்டிகளும் என்னவாகின என்று மத்திய அரசுக்க கேள்வி எழுப்பினார்.

சென்னை – சேலம் இடையே அமைக்கப்பட உள்ள 8 வழிச்சாலை திட்டம் குறித்து அந்த பகுதி மக்களிடம் அரசு  கருத்து கேட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.