சென்னை: பெண் நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்த மருத்துவர் கைது! குவியும் புகார்கள்!


சென்னை: சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த சென்னை  மருத்துவர் சிவகுருநாதன் (வயது 64) காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் பல பெண்கள் அவர் மீது புகார்செய்து வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் நாட்டுசுப்பராயன் வீதியில் ஆர்.எம். கிளினிக்கை மருத்துவர் சிவகுருநாதன் நடத்தி வந்தார். . இவருக்கு இரண்டு மகள்கள். இருவருமே மருத்துவர்களாக பணி புரிகிறார்கள்.

சில நாட்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற சிவகுருநாதன் கிளினிக்குக்கு வந்தார். அப்போது இளம்பெண்ணின் மேலாடையை கழற்ற வேண்டும் என சிவகுருநாதன் கூறியிருக்கிறார். அதேநேரத்தில் செல்போன் கேமரானை ஆன் செய்தும் மேஜை மீது வைத்திருக்கிறார்.

இதையடுத்து சந்தேகமடைந்த அந்த பெண், வெளியில் நின்றிருந்த கணவரிடம் சிவகுருநாதன் செயல் பற்றி தெரிவித்திருக்கிறார். இதையடுத்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.  காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிவகுருநாதன், சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து சிவகுருநாதன் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் மேலும் பல பெண்களை இது போல ஆபாசமாக படம் பிடித்ததாக பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன.,