சென்னை : ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த 48 வயது பெண் கொரோனாவால் மரணம்

--

சென்னை

கொரோனா பாதிப்பால் இன்று ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த 48 வயதுள்ள ஒரு பெண் மரணம் அடைந்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4800 ஐ தாண்டி உள்ளது.

இதில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிக பட்சமாகச் சென்னையில் மட்டும் நேற்று 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் பாதிப்படைந்தோர் மொத்த எண்ணிக்கை 2328 ஐ தாண்டி உள்ளது.

இதில் ஈக்காட்டுதாங்கல் பகுதியைச் சேர்ந்த 48 வயதுள்ள ஒரு பெண் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.