சென்னை: என்ஜினீயரை கொல்ல முயற்சி – கூலிப்படையினர் 3 பேர் கைது

 

 சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கத்தில் என்ஜினீயரை  ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில் ஒரு மாதத்திற்கு பிறகு போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

crime

சென்னை கொளத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் துபாயில், துப்பறியும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த மாதம் 22ந்தேதி துபாயிலிருந்து சென்னைக்கு திரும்பினார். அடுத்த நாள் மதியம் 2.30 மணி அளவில் தனது பெற்றோருடன் கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் சாலையில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.

ஓட்டல் முன் காரில் இருந்து இறங்கிய சரவணனை  மர்ம நபர்கள், அரிவாளால் வெட்டினார்கள். 3 முறை வெட்டியதும் சரவணன் கீழே சரிந்தார். மர்ம நபர்கள் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவரது பெற்றோர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்த சரவணன் கொலை முயற்சி வழக்கு பற்றி விசாரிக்க கீழ்ப்பாக்கம் காவல் நிலையம் சென்றார்.

ஆனால், போலீசார், சாதாரண முறையில் தாக்கப்பட்டு காயம் அடைந்ததாக வழக்கு பதிவு செய்திருந்தனர். மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க மறுத்தனர்.

ஆனால், சரவணன், துப்பறியும் நிபுணர் என்பதால், தன்னை தாக்கிய குற்றவாளிகள் பற்றிய தகவல்களை கண்டறிந்து, அதற்கு காரணமானவர்களையும் சரியாக அடையாளப்படுத்தை,  அதை ஆதாரமாக கொடுத்து, கீழ்ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மறுபடியும் சரியான விசாரணை மேற்கொள்ள  வற்புறுத்தினர்ர். ஆனால் கீழ்ப்பாக்கம் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன் காரணமாக சரவணன் நேற்று போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை நேரில் சந்தித்து கீழ்ப்பாக்கம் போலீசாரின் நடவடிக்கை பற்றியும், தான் தாக்கப்பட்டது குறித்தும் விரிவாக புகார் கொடுத்தார்.

இதையடுத்து கமிஷனரின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுத்த கீழ்ப்பாக்கம் போலீசார்  அதிரடியாக 3 ரவுடிகளை கைது செய்தனர். சாதாரண வழக்கு கொலை முயற்சி வழக்காக மாற்றப்பட்டது.. கைது செய்யப்பட்டவர்கள் கூலிப்படையினர் என தெரிய வந்தது. இவர்களுடன் வேறு யாரும் உள்ளார்களா என விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த கொலை முயற்சி வழக்கு விசாரணை விசுவரூபம் எடுப்பதை அறிந்த சரவணனின் மனைவியும்,  அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரும் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளனர்.

சரவணனும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
.

Leave a Reply

Your email address will not be published.