சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் தீ: நால்வர் பலி

--

சென்னை:

சென்னை வடபழனி தெற்கு  பெருமாள் கோயில் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் புகை மூட்டத்தில் சிக்கி நால்வர் பலியானார்கள்.

நான்கு மாடி கொண்ட அந்த குடியிருப்பில்,  கீழ்த்தளத்தில் செயல்பட்டு வந்த அச்சகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகை மூட்டத்தில் சிக்கி,  இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, மீனாட்சி (60)  செந்தில் (30)  சந்தியா (8) சஞ்சய் (3) ஆகியோர் பலியானார்கள்.  இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

மேலும் ஐவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 20 இரு சக்கரவாகனங்கள் முழுவதுமாக எரிந்துவிட்டன.

தற்போது தீ முழுதும் அணைக்கப்பட்டுவிட்டது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன. விசாரணை தொடர்கிறது.