சிலிண்டர் விநியோகம்… படு சிக்கலில் சென்னை..

சென்னை, செங்கல்பட்டு,,காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கு அறிவித்துள்ள தமிழக அரசு, இதனால் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படாது எனத் தெரிவித்திருந்தது.

ஆனால் கீழ்மட்ட காவலர்களுக்கு , அத்தியாவசிய பணி எது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியாததால், பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் பத்திரிகை விநியோகம் செய்யும் ஆட்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இப்போது வீடுகளுக்குச் சமையல் எரிவாயு செய்யும் ஊழியர்களும் தங்கள் அலுவலகங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

பஸ், ரயில் ஓடாத நிலையில் அந்த ஊழியர்கள், நண்பர்களின் இரு சக்கர வாகனத்தில் அலுவலகம் செல்கின்றனர்.

’ஈ.பாஸ் இல்லாததால் அந்த ஊழியர்களை , போலீசார் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு கூறுகின்றனர்.

இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் சப்ளையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

’’ கியாஸ் ஏஜென்சியில் வேலை பார்ப்பவர்களுக்கு ஈ.பாஸ் தேவை இல்லை என அரசாங்க ஆணையில் கூறப்பட்டுள்ளது. கியாஸ் ஏஜென்சியில் பணியாற்றும் ஊழியர்களின் அடையாள அட்டை  இருந்தால் போதும் என விதி உள்ளது, ஆனால் எங்கள் ஊழியர்கள் இரு சக்கர வாகனங்களில் வர அனுமதிக்கப்படாததால், சிலிண்டர் சப்ளையில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது’’ என கியாஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் புகார் கூறினர்.

– பா.பாரதி