25 நிமிடங்கள் மட்டும் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட சென்னை மாணவி

சென்னை

ரியான மேலாண்மை இல்லாததால் நீட் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நேற்று நாடெங்கும் நடந்துள்ளது,.   இதில் தமிழகத்தில் பல இடங்களில் சரியான மேலாண்மை இல்லாததால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.  பல இடங்களில் கேள்வித் தாள் விநியோகிப்பதில் கடும் தாமதம் ஏற்பட்டுள்ளது.   அதற்காக அதிக நேரம் அளிக்கப்படதாதால் ஒரு சில இடங்களில் அரை மணி நேரம் மட்டுமே தேர்வு எழுத நேரிட்டுள்ளது.

இவை அனைத்துக்கும் முதன்மையாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த நிவேதா என்னும் 19 வயது மாணவிக்கு 25 நிமிடம் மட்டுமே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ள்து;   சென்ற ஆனெடு நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் இந்த ஆண்டு நிவேதா தனியார் பயிற்சி மையத்தில் பயின்று மீண்டும் நீட் தேர்வு நேற்று எழுதி உள்ளார்.  இவருக்கு சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று அந்த பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற நிவேதாவுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.   அப்போது கருவியில் பீப் ஒலி கேட்டுள்ளதால் அதிகாரிகள் நிவேதாவை நிறுத்தி வைத்துள்ளனர்.   இதனால் அவர் காக்க வைக்கப்பட்டுள்ளர்.  மீண்டும் பரிசோதனையின் போது பீப் ஒலி கேட்காததால் அவர் 4.22 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கபட்டுள்ளார்.   அவருக்கு கூடுதல் நேரம் வழங்காததால் அவரால் 25 நிமிடங்க:ள் மட்டுமே தேர்வு எழுத முடிந்துள்ளது.

நிவேதா இது குறித்து, “நான் ஓராண்டு பயிற்சி பெற்று பயிற்சி நிலைய தேர்வுகள் அனைத்திலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.  மருத்துவர் ஆக வேண்டும் என்னும் எனது கனவு அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகி விட்டது.  என்னை 25 நிமிடங்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதித்தது குறித்து நீட் தேர்வு முகமைக்கு நான் புகார் அளித்த்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

நிவேதாவின் மாம பாலசந்தர், “நிவேதா மற்றும் 5 மாணவிகளை தெர்மல் செக் அப் முடிந்த பிறகு காரணம் ஏதும் கூறாமல் தனியாக அமர வைத்துள்ளனர்.  இவர்கள் வினாத்தாளை அளிக்க கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை9.  அதன் பிறகு இறுதியாக அனுமதி அளித்த போது நிவேதா தனக்கு 3 மணி நேரம் அளிக்கப்படும் என எண்ணிய நிலையில் 25 நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.  அவருக்கு மறு தேர்வு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.