தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவியர் பலி

சென்னை:

சென்னையில் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவியர் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

student-death-chennai

இன்று பிற்பகல், சென்னை கிண்டியில் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி, சாலையோரம்  நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில்  கல்லூரி மாணவிகள் காயத்ரி, ஆயிஷா, சித்ரா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து காவல்துறையினர்  மாணவிகளின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த  மூவருக்கு  ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் கத்திபாரா மேம்பாலத்தில் இருந்து  மெட்ரோ ரயில் நிலையம் வரை கடுமையான  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

 

கார்ட்டூன் கேலரி