மீண்டும் உயிர்பெறும் சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை: திட்ட மதிப்பீடு ரூ.2400 கோடியாக உயர்வு

சென்னை:

றைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால்  கிடப்பில் போடபபட்ட மதுரவாயல் துறைமுகம் இடையே யான பறக்கும் சாலை திட்டத்தின் தற்போதைய திட்ட மதிப்பீடு 2400 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

சென்னை துறைமுகத்துக்கு கண்டெய்னர் லாரிகள் வந்து செல்ல வசதியாக  மதுரவாயல்- முதல் துறைமுகம் வரை  பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 18 கி.மீ தூரத்துக்கு இந்த உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கப்பட கடந்த திமுக ஆட்சியின்போது ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு பணிகள் தொடங்கின.

தொடக்கத்தில், இந்த திட்ட மதிப்பீடாக  ரூ.1,530 கோடி என அறவிக்கப்பட்டு, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை யிலான 18.3 கி.மீ. நீளமுள்ள நான்குவழி பறக்கும் சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தது.

இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் எந்தவித போக்குவரத்து இடையூறின்றி சென்னை புறநகர் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் நகரின் உள்புற போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நேரடியாக சென்னை துறைமுகத்தை சென்றடையலாம்.

ஆனால், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு, திமுக கொண்டு வந்த திட்டம் என்ற காழ்ப்புணர்சி காரணமாக   இத்திட்டத்தை முடக்கி வைத்தது. அவரது மறைவுக்கு பிறகு கடந்த ஆண்டு எடப்பாடி தலைமையிலான அரசு, இந்த திட்டத்தை மாற்றுபாதையில் செயல்படுத்த ஒப்புதல் கொடுத்தது.

இதற்கிடையில், சாலை அமைக்கும் வழியில் உள்ள சென்னை கடற்படைக்கு சொந்த இடம்  தொடர்பாக பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து,  மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலைப் பணிகள் மீண்டும் தொடங்குவதற்காக நடைமுறைகள் தொடங்கின.

நில ஆர்ஜிதம் புணரமைப்பு, மறுசீரமைப்பு ஆகிய பணிகளில் சென்னை துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், இந்த பணிக்கான திட்ட மதிப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தற்போது ரூ.2400 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் உயிர்பெற்றுள்ளது…