சென்னை

சென்னை நகரின் குடிநீர் ஆதாரங்களில் தற்போது 1.3% நீர் மட்டுமே உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரியில் இருந்தே. சென்னை நகருக்கு குடிநீர் வரத்து குறைந்துள்ளது. இதற்காக சென்னை குடிநீர் வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்தும் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் உள்ளது. ஒரு நாளைக்கு மொத்தம் 88 கோடி லிட்டர் நீர் வழங்கப்பட்ட நிலையில் அது 55 கோடிலிட்டராக குறைக்கப்பட்டது. இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் ரெட் ஹில்ஸ் ஏரியின் நீர் மிகவும் வரண்டு போனதால் தற்போது தினம் 9 முதல் 12 கோடி லிட்டர் நீர் வழங்கப்பட்டு வருகிறது.

நேற்று குடிநீர் வாரியம் வெளியிட்ட தகவலின்படி செம்பரம்பாக்கத்தில் முழுமையான கொள்ளளவான 3645 கன அடி நீரில் தற்போது 36 கன அடி நீர் மட்டுமே உள்ளது. ரெட் ஹில்ஸ் ஏரியிலும் மிகவும் வரண்டு போய் உள்ளது. சோழவரம் ஏரியிலும் நீர் பரப்பு மிகவும் குறைந்துள்ளது. இந்த நீர்நிலைகளில் தற்போது முழு கொள்ளளவில் 1.3% நீர் மட்டுமே உள்ளது.

குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர், ”பருவமழை பொய்க்கும் காலங்களில் எல்லாம் அடுத்து வரும் கோடைக் காலத்தில்சென்னையில் கடும்ம்குடிநீர் பஞ்சம் ஏற்படுகிறது. தற்போது அனைத்து நீர் நிலைகளிலும் 1.3% நீர் இருந்தாலும் விரைவில் அது வரண்டு போகலாம். இது போன்ற ஒரு பஞ்சம் கடந்த 70 ஆண்டுகளில் நிகழ்ந்தது இல்லை” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் இதற்கு முன்பும் பல முறை இது போல நீர் அளவு குறைந்துள்ளதை சுட்டிக் காட்டி உள்ளார்.

தற்போதைய நிலையை குறித்து தமிழ்நாடு வெதர்மேன், “சென்னை நகருக்கு இப்போதுள்ள நிலையில் வீராணம் நீர் மட்டுமே கை கொடுக்க உள்ளது. ஜூலையில் அனைத்து நீர் நிலைகளும் வற்றும் . ஜூன் மாதத்தில் இருந்து தென் மேற்கு பருவ மழை சென்னைக்கு ஓரளவு நீர் வரத்தை அளிக்கும்.

அத்துடன் இந்த பருவமழை மிகவும் குரைவாகவே இருக்கும்.  வடசென்னையில் எப்போதாவது ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் பெய்தாலும் தென் சென்னையில் அதுவும் இருக்காது.

சென்னைக்கு நீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க ஒரே வழி மழை நீர் சேகரிப்பு மட்டுமே ஆகும். நாம் அதை சரியாக செய்தால் நமக்கு தண்ணீர் பற்றாக்குரை இருக்காது. யாரால் இதை செய்ய முடியுமோ அவர்கள் அவசியம் செய்ய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.