அம்ரிதா வழக்கு : ஜெயலலிதா ரத்த மாதிரியை அளிக்க அப்போல்லோவுக்கு நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை

ம்ரிதா என்னும் பெண் தான் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரியை அளிக்க வேண்டும் என அப்போல்லோ மருத்துவமனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பெங்களூருவை சேர்ந்த அமிர்தா என்னும் பெண் தாம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.   அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் அவரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு அறிவுறுத்தியது.   அதன் படி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு மரபணு பரிசோதனை செய்யக் கோரி அமிர்தா சார்பில் கோரப்பட்டது.   ஜெயலலிதாவின் ரத்த மாதிரியைக் கொண்டு மரபணு சோதனை நடத்தலாம் என்பதால் அப்போல்லோ மருத்துவமனையில் ரத்த மாதிரியை அளிக்குமாறு உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.   ஆனால் அதற்கு கால அவகாசம் வாங்கிய மருத்துவமனை நிர்வாகம் ரத்த மாதிரியை அளிக்கவில்லை.

இதனால்  உயர்நீதிமன்றம்  நாளைக்குள் ஜெயலலிதாவின் ரத்த மாதிரியை அளிக்க வேண்டும் என அப்போல்லோ மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது.   அம்ரிதா தரப்பில் இந்த வழக்கை சீக்கிரம் முடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுள்ளது.  வழக்கு விசாரணையை வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது