துரை

க்களின் கோரிக்கை மனுக்களுக்கு அரசாணைப்படி தீர்வு கிடைக்கிறதா என்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் ஒரு மனு அளித்துள்ளர்.  அந்த மனுவில், “பொதுமக்கள் தங்கள் மற்றும் பொது நலன் குறித்த கோரிக்கை மனுக்களை அளிக்கும் போது பலமுறை ஒப்புகைச் சீட்டு வழங்குவது கூட கிடையாது.  பல நேரங்களில் அது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டு விடுகின்றனர்.

இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதால் மக்கள் இது குறித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்கின்றனர்.   இதனால் மக்கள் மற்றும் நீதிமன்ற நேரம் வீணாகிறது.   இதற்கு முக்கிய காரணம் அரசாணைப்படி அவர்கள் கோரிக்கை மனுக்களுக்குத் தீர்வு கிடைக்காததே ஆகும்.   அரசாணைப்படி எந்த மனுவும் ஒரு வாரத்துக்கு மேல் அரசு அலுவலகங்களில் நிலுவையில் இருக்கக் கூடாது.

அது மட்டுமின்றி மனுக்கள் அளிக்கப்பட்ட இரு தினங்களுக்குள் அந்த விவரங்கள் கணினியில் பதிந்து ஒப்புகைச் சீட்டு அளிக்க வேண்டும்.   ஆனால்  இவ்வாறு எந்த அதிகாரியும் நடப்பதில்லை.  ஆகவே பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும்.  அத்துடன் இந்த நடவடிக்கைகளை மேற்பார்வை இட உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.   இவ்வாறு நடக்காத அதிகாரிகள் மீது உரிய தண்டனை அளிக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

நேற்று இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயண் மற்றும் புகழேந்தி ஆகியோரின் அமர்வின் கீழ்  விசாரணைக்கு வந்தது.   இந்த அமர்வு, “மக்களின் குறை தொடர்பான கோரிக்கை மனுக்கள் மீது அரசாணைகள் பின்பற்றி நடவடிக்கை எடுக்கப் படுகிறதா?   முறையான நடைமுறைகளை அதிகாரிகள்  பின்பற்றுகிறார்களா?

பொதுமக்கள் இ சேவை மூலம் அளிக்கப்படும் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதா?   இவை குறித்ஹ்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதில் அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளது.  இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.