ஓ.பி.எஸ்.  மகன், சகோதரரை கைது  செய்ய உயர்நீதிமன்றம் தடை .!

சென்னை:

ஆர்.கே நகரில் நடந்த மோதல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் மற்றும் சகோதரரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர்களுக்கும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தினகரன் ஆதரவாளர் ஒருவரை கொலை செய்ய முயன்றதாகக் கூறி, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா ஆகிோயர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து  இருவரும் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். . இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இருவரையும் கைது செய்வதற்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்கும்படி  ஆர்.கே நகர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டனர்.  வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.