எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா : பானர்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை

எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விதிகளை மீறி வைக்கபட்டுள்ள பானர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இன்று மாலை எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.   அதை ஒட்டி மாநிலம் முழுவதிலும் இருந்து பலர் சென்னைக்கு வந்துக் கொண்டு இருக்கின்றனர்.   இதனால் சென்னை வரும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நகரெங்கும் விழாக்கோலம் பூண்டுள்ளது.   நகரில் பல இடங்களில் இந்த விழாவுக்காக பானர்கள் வைக்கப்பட்டுள்ளன.   அந்த பானர்களில் பெரும்பாலானவை சாலை மற்றும் நடைபாதையின் குறுக்கே வைக்கப்பட்டுள்ளன.   இதனால் மக்களுக்கு மிகவும் சிரமம் உண்டாகி இருக்கிறது.

இவ்வாறு பானர்கள் வைப்பது சட்ட விரோதம் எனவும் அவற்றை அகற்ற வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.   அந்த வழக்கு இன்று அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் ஆகியோரின் அமர்வு விசாரணை செய்தது.

விசரணை முடிவில் உயர்நீதிமன்ற அமர்வு சட்டவிரோதமாக வைக்கபட்டுள்ள பானர்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற் வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.