சென்னை

ற்காடு இளவரசர் பட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஆற்காடு நவாபுக்கு ஆற்காடு இளவரசர் எனப் பட்டம் அளிக்கப்பட்டது.   அத்துடன் அவர்கள் குடும்பத்தினருக்குப் பல சலுகைகள் ஆங்கிலேய அரசால் வழங்கப்பட்டன.    கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இந்த பட்டம் மற்றும் சலுகைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை  பெரம்பூரைச் சேர்ந்த குமாரவேலு என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கு மனுவில், “இந்தியா சுதந்திரம் அடைந்து தற்போது ஜனநாயக நாடாக உள்ளது. ஆயினும் இன்னும் ஆற்காடு இளவரசர் பட்டமும் அவர்கள் குடும்ப சலுகைகளையும் அரசு தொடர்ந்து அளித்து வருகிறது.

சென்னையில் உள்ள அமீர் மகாலில் ஆற்காடு இளவரசர் வசித்து வருகிறார்.  அந்த அமீர் மகாலுக்கு கடந்த 2005 அண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை மத்திய பொதுப்பணித்துறை ரூ.2.74 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.   எனவே நீதிமன்றம் ஆற்காடு இளவரசர் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.  மற்றும் அவர்களுக்கு அளித்து வரும அனைத்து சலுகைகளையும் திரும்பப் பெறவேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.

சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதிக:ள் சத்திய நாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோரின் அமர்வு இந்த மனுவை விசாரித்து வந்தது.  அமர்வு தந்து திர்ப்ப்பில், “ஆங்கிலேயர் ஆட்சியில் அளிக்கப்பட்ட இந்த ஆற்காடு இளவரசர் பட்டம் அவரது பரம்பரைக்கும் தொடரும் என்பது அப்போதே தெரிவிக்கப்பட்டுள்ளது.   அமீர் மகால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த ஆற்காடு இளவர்சர் பட்டத்தையும் அவர்களுக்கான சலுகைகளையும் மத்திய அரசு ஏற்கனவே அங்கீகரித்துள்ளது.   இது மத்திய அரசின் நிர்வாக விவகாரமாகும்.  இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.  எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது.