ராம்குமார் தந்தை மனு: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

சென்னை:

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரை அதில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற ராம்குமாரின் தந்தை பரமசிவத்தின் மனுவை  சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை அறிவி்த்தது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் ராம்குமாரின் தந்தை பரமசிவம்,  ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யும்போது போரூர் ராமசந்திரா மருத்துவமனையின் தடவியல் துறை மருத்துவர் சம்பத் குமாரை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

பரமசிவம் - ராம்குமார்
பரமசிவம் – ராம்குமார்

அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. அரசு நியமித்த 4 மருத்துவர்கள் கொண்ட குழுவுடன், டெல்லி எயம்ஸ் மருத்துவர் ஒருவரை கூடுலாக நியமித்து 27ம் தேதிக்குள் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chennai, father, HC, petition, ramkumar, Rejected, tamilnadu, உயர்நீதிமன்றம், தந்தை, தமிழ்நாடு, நிராகரிப்பு, மனு, ராம்குமார்
-=-