பாஜக வேல் யாத்திரைக்கு தடை கோரும் வழக்கு இன்று விசாரணை

சென்னை

ன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் வேல் யாத்திரையைத் தடை செய்யக் கோரும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கப்பட உள்ளது.  இந்த யாத்திரை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அன்று திருச்செந்தூரில் நிறைவு செய்யப்பட உள்ளது.  தமிழகத்தில் பல தரப்பினர் இந்த வேல் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த வேல் யாத்திரையை எதிர்த்து செந்தில் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு மனுவில் அவர், “கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பக்தர்கள் கூட்டமாகக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.  அவ்வகையில் விநாயகர் சதுர்த்தி, மொகரம் உள்ளிட்ட விழாக்கள் நிறுத்தப்பட்டன.  இந்நிலையில் வேல் யாத்திரைக்கு அனுமதித்தால்  அது கொரோனா தொற்று அதிகரிக்க வழி வகுக்கும்.

மேலும் இந்த வேல் யாத்திரை பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று நிறைவடைகிறது.  ஆகவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது.  எனவே இந்த வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தமிழக டிஜிபி, பாஜக மாநிலத் தலைவர் முருகன் உள்ளிட்டோர் எதிர்மனு தார்ர்களக சேர்க்கப்பட்டுள்ளனர்.   இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.