சென்னையில் விதிமீறும் கட்டடங்களை இடிக்காத சிஎம்டிஏ தேவையா?….உயர்நீதிமன்றம்

சென்னை:

விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காத சிஎம்டிஏ.வை ஏன் கலைக்க கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் விதிமீறி கட்டப்பட்ட 6 மாடி கட்டிடத்திற்கு சீல் வைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டடங்களுக்கு சீல் வைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி கிருபாகரன் கூறுகையில், ‘‘2015ம் ஆண்டு வெள்ளத்தில் இருந்து அதிகாரிகள் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை, ஆக்கிரமிப்பாளர்களிடம் அதிகாரிகள் பணம் பெறுவதால் விதிமீறல் கட்டடங்கள் பெருகுகின்றன ஒருநாள் பெய்த மழைக்கே சென்னை மிதக்கிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய பகுதிகளில் விதிமீறல்களை எப்படி தடுக்க போகிறீர்கள்?. விதிமீறல் கட்டடங்களை இடிக்க தவறிய இந்த அமைப்பை ஏன் கலைக்க கூடாது’’ என்று சராமரியான கேள்விகளை எழுப்பினார்.