சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிட கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம்,  மாநில அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுடன், குடிமகன்கள் அங்கே அமர்ந்து, குடிக்கும் வகையில் பார்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

இதை எதிர்த்து,  பார்களை மூடவேண்டும் என வழக்கறிஞர் சிலம்பரசன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை,  நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதார தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பார்கள் இருக்கின்ற காரணத்தால் அந்த பகுதிகளில் விபத்துக்கள் அதிகளவில் நடப்பதாகவும், பார்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதாகவும் வாதம் செய்தார்.

ஆனால்,  குற்றச்சாட்டுக்களை  மறுத்த உயர்நீதிமன்றம் நீதிபதிகள், மதுக்கடைகள், பார்களை மூடுவது மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

அதேசமயம், பார்கள் உரிமையில்லாமல் சட்டவிரோதமாக இயங்கினால் அது சம்மதமாக மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை உள்ளது என்று கூறினர்.