சென்னை:

களின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி கண்ணீரோடு வாதாடினார். அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான நளினி கடந்த  28 வருஷங்களை சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர்,  தனது மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கோரி சிறைத் துறையிடம் விண்ணப்பித்திருந்த நிலையில், அது ஏற்றுக்கொள்ளப்படாததை தொடர்ந்த சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் கடந்தகால விசாரணைகளின்போது, நளினி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறை நிர்வாகம் பல்வேறு காரணங்களை கூறி தடுத்து வந்த நிலையில், கடந்த விசாரணையின்போது, நீதிபதியின் அதிரடி உத்தரவு காரணமாக, இன்றைய விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார்.

வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நளினி சென்னை உயர்நீதி மன்றத்திக்கு அழைத்து வரப்பட்ர். சென்னை உயர்நீதி மன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து, விசாரணைக்கு நீதிபதிகள் முன்பு நளினி ஆஜர்படுத்தப் பட்டார்.

அப்போது, தனக்கு நேரில் வாதாட அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்த நளினி, தான் எழுதி வைத்திருந்த வாதத்தை நீதிபதிகளிடம் வாசித்து தனது தரப்பு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

தான் இதுவரை சிறை விதிகளை முறையாக கடைப்பிடித்து வருவதாகவும், தற்போது, தனது மகள் திருமணத்திற்காக  6மாத கால பரோல் வழங்க வேண்டும் என்றும் கண்ணீருடன்  கோரிக்கை வைத்தார்.

நளினியினின் கோரிக்கைக்கு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.  வேண்டுமென்றால், பேரறிவாள னுக்கு அளிக்கப்பட்டது போல ஒரு மாத பரோல் நளினிக்கு வழங்க அரசு  தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, நளினிக்கு ஒரு வாதம் பரோல் கொடுத்த நீதிமன்றம்,  பரோலில் விடுதலை செய்ய நளினி தரப்பில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.

அதன்படி, நளினி  தனது உறவினர்கள், நண்பர்கள், தங்குமிட முகவரி உள்ளிட்டவற்றை சிறைத்துறைக்கு  தெரிவிக்க வேண்டும். அதை ஆய்வு செய்து 10 நாட்களில், நளினிக்கு பரோல் வழங்குவது குறித்து சிறைத்துறை  முடிவு செய்ய வேண்டும் என்றும்  உத்தரவிட்டது.

மேலும், பரோல் காலத்தில் நளினி, அரசியல் தலைவர்கள், செய்தியாளர்களைச் சந்திக்கக் கூடாது என்றும்,  பரோல் நிபந்தனைகளை மீறினால் உடனடியாக பரோல் ரத்தாகி விடும் என்றும் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.