திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்…!

சென்னை: வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் திமுக முதன்மைச் செயலாள கே.என்.நேருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

திருச்சி மாவட்டம், முசிறியில் திமுக தோ்தல் அலுவலகத்தில் சில வாரங்களுக்கு முன்பு அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியின் வேட்பாளருமான கே.என் நேரு, வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பது குறித்து பேசியதாக விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுகுறித்து தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் அளித்த புகாரின் பேரில் முசிறி காவல் நிலையத்தில் கே.என். நேரு மீது புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவா் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடா்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு அரசியல் ஆதாயத்துக்காக போடப்பட்டதாக நேரு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் கே.என்.நேருவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.