தேவர் ஜெயந்தி: அதிமுக பேனரை கிழித்த டிடிவி ஆதரவாளர்களை கைது செய்ய உயர்நீதி மன்றம் தடை

மதுரை:

டந்த 30ந்தேதி தேவர் ஜெயந்தி விழாவுக்கு  பசும்பொன் வருகை தந்த முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தது தொடர்பாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்பட 63 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பான  வழக்கு பதிவு செய்யப்பட்ட 63 பேரையும் கைது செய்ய சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

பசும்பொன் தேவர் குருபூஜையையொட்டி கடந்த மாதம்  30ந்தேதி அவரது  நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவர்களை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் கமுதி பகுதியில், ஏராளமான பேனர்கள்  வைத்திருந்தனர்.

டிடிவி ஆதரவாளர்களால் கிழிக்கப்பட்ட பேனர்கள்

அதைப்பார்த்த டிடிவி ஆதரவாளர்கள், அங்கிருந்த அதிமுக பேனர்களை கிழித்து எறிந்தனர். இதன் காரணமாக பரபரப்பு பதற்றம் நிலவியது. காவல்துறையினர் குவிக்கப்பட்டு டிடிவி ஆதரவாளர்களை அப்புறப்படுத்தினர்.

இது தொடர்பாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில், கமுதி காவல்துறையினர்  டிடிவி தினகரன் உள்பட 63  மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதன் காரணமாக  அமமுக நிர்வாகிகள் சார்பில் உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புகார் பதிவு செய்யப்பட்ட 63 பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Chennai High Court interim bans TTV supporters for lancinating AIADMK banner on Devar Jayanthi day, தேவர் ஜெயந்தி: அதிமுக பேனரை கிழித்த டிடிவி ஆதரவாளர்கள் 52 பேர் கைது
-=-