சன் டிவி-க்கு எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை:

ன் தொலைக்காட்சிக்கு எதிராக சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சோனி மியூசிக்  நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து. அதில், தங்களது நிறுவனம் உரிமம் பெற்றுள்ள திரைப்பட பாடல்களையும், நிகழ்ச்சியின் பின்னணி  இசையையும்  சன் டிவி, தங்களிடம் அனுமதி பெறாமல் ஒளிபரப்புவதை தடுக்க  வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

“சோனி மியூசிக் உரிமம் பெற்றுள்ள பாடல் மற்றும் இசையை அவர்களிடம் அனுமதி வாங்கிய பிறகே  இனி சன் தொலைக்காட்சி ஒளிபரப்ப வேண்டும்” என்று தீர்ப்பளிக்கப்பட்டது.