தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை ஐகோர்ட்டுக்கு வரும் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை விடுமுறை: பதிவாளர் அறிவிப்பு

சென்னை: தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வரும் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை பதிவாளர் சி. குமரப்பன் வெளியிட்டுள்ளார். அவசர வழக்குகளுக்கு அக்டோபர் 20ல் மனுதாக்கல் செய்தால் அக்டோபர் 22ல் விசாரணை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பார்த்திபன், வேல்முருகன், ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் வழக்குகளை விசாரிப்பர் என்றும் நீதிபதிகள் ஆஷா, சரவணன் ஆகியோரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று பதிவாளர் சி. குமரப்பன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கல்யாண சுந்தரம், அப்துல் குத்தூஸ் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

You may have missed