சென்னை:
ட்சி பதவி தருவதாக கூறி  பண மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ள  புகாரில் முகாந்திரம் இருந்தால் ஜெ.தீபா மீது வழக்குப் பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கட்சிப் பதவி பெற்று தருவதாக ரூ 1.12 கோடி மோசடி செய்ததாக ஜெ.தீபா மற்றும் அவரது உதவியாளர் ராஜா மீது சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி ராமச்சந்திர்ன் புகார் கூறியிருந்தார். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக பதவி வகித்தேன். அப்போது என்னிடம் பேரவை, கட்சி அலுவலகம் மற்றும் குடும்பச் செலவுக ளுக்காக ஜெ.தீபாவும், அவரது கார் ஓட்டுநரான ஏ.வி.ராஜாவும் 2017 பிப்ரவரி முதல் பல்வேறு கால கட்டங்களில் ரூ.1.12 கோடி பணம் பெற்றனர்.

தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகவும், பின்னர் அமைச்சராக்குவதாகவும் கூறியதன் அடிப்படை யில்தான் அவர்களுக்கு பணம் கொடுத்தேன். ஆனால், அவர்கள் என்னை ஏமாற்றுகின்றனர் என்று தெரிந்து, பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து  சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நான் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது, வழக்கை விசாரைணை செய்த நீதிபதி, புகாரில் முகாந்திரம் இருந்தால் ஜெ.தீபா மீது வழக்குப் பதியலாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன் காரணமாக தீபா மற்றும் அவரது கார் டிரைவர் மீது விரைவில் வழக்கு பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.