இந்து மதத்தை அவமதித்தாக விஜய் தந்தை எஸ்.ஏ.சி. மீதான வழக்கு:  அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

டிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்,   விசிறி எனும் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது என்று பேசினார்.

இது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில்  இருக்கிறது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னனி அமைப்பைச் சேர்ந்த வி.ஜி.நாராயணன் என்பவர்  சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். .

எஸ்.ஏ.சி. தனது மனைவி ஷோபாவுடன்

அதன்பேரில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தனது புகாரின் அடிப்படையில் எஸ்.ஏ. சந்திரசேகர் மீது  நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை விசாரித்து இறுதி அறிக்கையை மூன்று மாதங்களில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையே இந்த வழக்கில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருக்கிறது.

கார்ட்டூன் கேலரி