இளையராஜா பாடல்களை அவரின் அனுமதியின்றி பயன்படுத்த தடை…!

1976 ஆம் ஆண்டு முதல் திரைப்பட பாடல்களுக்கு இசை அமைத்து வருபவர் இசைஞானி இளையராஜா. தமிழகம் மட்டுமில்லை உலகம் முழுவதும் இவரின் இசை இல்லாமல் இருக்காது.

தன்னிடம் அனுமதியும் வாங்காமல் தன் இசையை அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனது இசையை பயன்படுத்தி வருவாய் ஈட்டி வரும் அவர்கள் , நான் இசையமைத்து உள்ளேன் என்ற அடிப்படையில் எனக்கு எந்த விதமான வருவாயும் வழங்குவதில்லை.

எனவே எனது பாடல் எனது காப்புரிமை. எனது அனுமதியின்றி வணிக ரீதியாக மேடைகளில் பாட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் இளையராஜா .

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், இளையராஜாவின் அனுமதியின்றி டிவி நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆன்லைன் மற்றும் திரைப்படங்களில் அவரின் பாடல்கள் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chennai high court, ilayaraja, Ilayaraja Songs, music, Tamil cinema
-=-