சென்னை:

நீட் தேர்வை எழுத விரும்பி பதிவு செய்துள்ள மாணவர்களில் சிலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு எழுதும் மையத்தை ஒதுக்கி சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது. இது தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சிபிஎஸ்இ கல்வி வாரியமும், தமிழக அரசும்  நாளையே பதில் அளிக்க வேண்டும் என் சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நடத்தப்பட்டு வரும் நீட்  பொது நுழைவுத்தேர்வு வருகிற மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வை எழுத பதிவு செய்துள்ள தமிழக மாணவர்கள் பலருக்கு, வேறு மாநிலங்களில் தேர்வு மையத்தை  சிபிஎஸ்இ ஒதுக்கி உள்ளது. இது தமிழக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை எதிர்த்து, சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மைலவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில, அண்டை மாநிலங்ளுக்கு சென்று தேர்வு எழுத தமிழக மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்றும், அதற்கான செலவும் அதிகரிக்கும். எனவே, தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என கோரி இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து பதில் அளிக்கும்படி,  தமிழக அரசு மற்றும் சிபிஎஸ்இ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்வு தேதி நெருங்கி வருவதால், நாளையே விளக்கமளிக்க வேண்டும் என்றும், நாளை மறுதினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று  கூறி வழக்கு  ஒத்தி வைக்கப்பட்டது.