Random image

விஸ்வரூபம்-2 படத்துக்கு தடையில்லை: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை:

மல் நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் வெளியிட தடையில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு  உள்ளது.

விஸ்வரூபம்-2 படத்திற்கு தடைவிதிக்கக்கோரிய பிரமிட் சாய்மீரா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, சாய்மீரா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்  படம் வெளியாக தடை விதிக்க முடியாது என்று கூறி உள்ளது.

கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ படம்  தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டு உள்ளது. நாளை (ஆகஸ்ட் 10-ம் ) உலகம் முழுவதும் வெளியாகிறது.

இப்படத்திற்கு தடை விதிக்க கோரி பிரமீட் சாய் மீரா நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த 2ந்தேதி மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில்,‘‘மர்மயோகி படத்தில் கமல் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. படம் உருவாகாத நிலையில் வாங்கிய சம்பளத்தையும் கமல் திரும்ப அளிக்கவில்லை. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.