சென்னை: தனது விசாரணை அமர்வுகள் செயல்படும் நடைமுறையில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகளுக்கு நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில், வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய கட்டுப்பாட்டு விதிமுறையின்படி, திங்கட்கிழமை முதல் இரண்டு அமர்வுகள் மற்றும் 3 தனி நீதிபதிகள் மட்டுமே அவசர வழக்குகளை வீடியோகான்ஃபரன்ஸ் மூலமாக விசாரிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு ஏற்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதானது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.